Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 21, 2011 01:15 AM


Google News

நாமக்கல்: நலவாரிய பணப்பயன்கள் தாமதமின்றி கிடைக்க வலியுறுத்தி, நாமக்கல் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன், இந்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர்கள் நடராஜன், மோகன், மாவட்ட தலைவர் சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பதிவு மனுக்களை சரிபார்த்தலுக்காக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பும் முறையை கைவிட வேண்டும்.நலவாரிய பணப்பயன்கள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us