போடி-அகமலைக்கு கூடுதல் பஸ் வசதி தேவை
போடி-அகமலைக்கு கூடுதல் பஸ் வசதி தேவை
போடி-அகமலைக்கு கூடுதல் பஸ் வசதி தேவை
ADDED : ஜூலை 13, 2011 10:31 PM
போடி : போடி-அகமலை மலைக்கு கூடுதல் பஸ்வசதி செய்துதர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகமலை கிராமத்தில் போடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளுக்கு போடியிலிருந்து வேட்டகருப்பசாமி கோயில் ஆற்றுப்பகுதியை கடந்து அகமலைக்கு செல்ல ரோடு, பாலம் வசதி இல்லை. போடியிலிருந்து அகமலைக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததினால் பெரியகுளம் சென்று அகமலை செல்லும் நிலை உள்ளது. அகமலைக்கு ரோடு வசதி இருந்தும் சமீபத்தில் பெய்த மழையால் ரோடு சேதமாகியுள்ளன.
இதனால் பெரியகுளத்தில் இருந்து கண்ணக்கரை வரை பஸ்சில் சென்று அங்கிருந்து நடந்து அகமலை செல்ல வேண்டும். பெரியகுளத்திலிருந்து கண்ணக்கரைக்கு ஒரு சில பஸ்களே செல்வதால் வேன்களில் செல்ல வேண்டியதுள்ளது. நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. நேரம் வீணாவதுடன், அலைச்சலும் அதிகரிக்கிறது. போடி-அகமலைக்கு நேரடி பஸ் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


