Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

ADDED : ஆக 09, 2011 02:44 AM


Google News

செஞ்சி : தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் செஞ்சியில் நடந்தது.மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார்.

துணை தலைவர் அண்ணாதுரை, இணை செயலாளர் சகலகலாதரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் தங்கராஜ் வரவேற்றார்.நிறுவனத்தலைவர் முன்னாள் எம்.எல்.சி., மாயவன், மாநில தலைவர் நாராயணசாமி, செய லாளர் தண்டபாணி, முன்னாள் தலைவர் ஏழுமலை சிறப்புரை நிகழ்த்தினர்.வட்ட தலைவர் ராமசாமி நன்றி கூறினார். செஞ்சி வட்ட தலைவராக ராமசாமி, செயலராக சங்கர், பொருளாராக தேவராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தமிழக அரசின் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு லேப் டாப், சீருடை, ஊக்கத்தொகை, மாணவர் விடுதிகளுக்கு சொந்த கட்டடம், உணவுப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் பாராட்டுக்கு உரியவை.ஆறாவது ஊதிய மாற்றுக்குழு குறைபாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பொதுமாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்

பட்டன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us