/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சமூக பாதுகாப்பு திட்டத்தில் 1,643 பேருக்கு உதவித்தொகைசமூக பாதுகாப்பு திட்டத்தில் 1,643 பேருக்கு உதவித்தொகை
சமூக பாதுகாப்பு திட்டத்தில் 1,643 பேருக்கு உதவித்தொகை
சமூக பாதுகாப்பு திட்டத்தில் 1,643 பேருக்கு உதவித்தொகை
சமூக பாதுகாப்பு திட்டத்தில் 1,643 பேருக்கு உதவித்தொகை
ADDED : ஆக 26, 2011 12:59 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1,643 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, தேசிய விதவை உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவி தொகை, விவசாய கூலி உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட ஆதாரவற்ற பெண்கள் உதவித்தொகை, முதிர் கன்னிகள் உதவி தொகை ஆகிய திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய கடந்த ஜூன் மாதம் உள் வட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 5,605 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், பாலக்கோடு தாலுகாவை சேர்ந்த, 684 பயனாளிகளும், பென்னாகரம் தாலுகாவில், 446 பேரும், அரூர் தாலுகாவில், 513 பேரும் தேர்வு செய்யப்பட்டு, 1,643 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக அந்தந்த தாலுகாவில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.