/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி செல்லாக் குழந்தைகள் இணைப்பு மையத்தில் சேர்ப்புபள்ளி செல்லாக் குழந்தைகள் இணைப்பு மையத்தில் சேர்ப்பு
பள்ளி செல்லாக் குழந்தைகள் இணைப்பு மையத்தில் சேர்ப்பு
பள்ளி செல்லாக் குழந்தைகள் இணைப்பு மையத்தில் சேர்ப்பு
பள்ளி செல்லாக் குழந்தைகள் இணைப்பு மையத்தில் சேர்ப்பு
ADDED : செப் 25, 2011 01:11 AM
ஆனைமலை :ஆழியார் அருகே பள்ளி செல்லாத மலைவாழ் குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
ஆழியார் அணையை ஒட்டியுள்ள பந்தக்கல் அம்மன்பதி பகுதியில், மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்திய போது, மலைவாழ் மக்களின் செட்டில்மென்ட் பகுதியில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருவர், பள்ளிக்கு செல்வதில்லை என தெரியவந்தது. இவர்களை, சின்னார் துவக்கப் பள்ளியில், அதிகாரிகள் சேர்த்தனர். இதுவரை, பந்தக்கல் அம்மன்பதியை சேர்ந்த 17 சிறுவர்கள், ஆழியாரில் உள்ள சின்னார்பதி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இணைப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் வழங்கப்பட்டன.