/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு இனிப்புடன் பாராட்டு! மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகழாரம்தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு இனிப்புடன் பாராட்டு! மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகழாரம்
தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு இனிப்புடன் பாராட்டு! மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகழாரம்
தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு இனிப்புடன் பாராட்டு! மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகழாரம்
தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு இனிப்புடன் பாராட்டு! மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகழாரம்
ADDED : ஆக 25, 2011 11:51 PM
திருப்பூர் : தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு, திருப்பூர் மாநகராட்சியில்
நேற்று நடந்த மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகழாரம் சூட்டினர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இனிப்பு வழங்கி, சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
அதேநேரத்தில், மாநகராட்சி சுகாதாரத்துறையை கண்டித்து ம.தி.மு.க.,
கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திருப்பூர் மாநகராட்சி கூட்டம், மேயர்
செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது; கமிஷனர் ஜெயலட்சுமி முன்னிலை
வகித்தார். கூட்டத்தின் துவக்கத்தில், விஸ்தரிக்கப்படும் திருப்பூர்
மாநகராட்சியில் 'மாநகர் வளர்ச்சி திட்டம்' என்ற தலைப்பில், அடுத்த 10
ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் அதன் உத்தேச மதிப்பீடு
குறித்து படவிளக்கம் காட்டப்பட்டது.தற்போது 28 சதுர கி.மீ., உள்ள
மாநகராட்சி, ஒருங்கிணைந்த மாநகராட்சியாகும்போது 160 சதுர கி.மீ., ஆக
மாறும். தற்போது 4.5 லட்சம் மக்கள் தொகை; 8.75 லட்சம் மக்கள் தொகையாக
உயரும். இதே வளர்ச்சி நிலையில், 25 ஆண்டுகளில் 23 லட்சமாக மக்கள் தொகை உயர
வாய்ப்புள்ளது. எதிர்கால வளர்ச்சி, பொருளாதார நிலை, மக்கள் நலன், சுகாதார
பாதுகாப்பு என்ற அடிப்படையில், இத்திட்டத்தில் குடிநீர் மேம்பாடு, நீர்நிலை
மேம்பாடு, மழைநீர் வடிகால் மேம்பாடு, பாதாள சாக்கடை அமைத்தல், திடக்கழிவு
மேலாண்மை, போக்குவரத்து மேம்பாடு, தெருவிளக்கு மேம்பாடு, குடிசை பகுதி
மேம்பாடு, சமுதாய உள்கட்டமைப்பு, வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் பிற
திட்டங்கள் என 3,271.80 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள்
தொடர்பாக விளக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த கவுன்சிலர்கள்
விவாதம்:ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க., குழு தலைவர்): முதல்வர் ஜெயலலிதா
தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, 100 நாட்களில் மக்கள் பாராட்டும் பல
நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 37 துறை
சார்ந்த அலுவலகங்கள் அமைக்க 25 கோடி ரூபாய் திருப்பூருக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. சாய, சலவை பிரச்னைக்கு தீர்வு காணவும், பனியன் தொழிலை
பாதுகாத்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு
ஏற்படுத்தவும், தொழில் துறைக்கு 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன்
வழங்கப்பட்டுள்ளது. ஐந்து சதவீத 'வாட்' வரி ரத்து செய்யப்பட்டுள்ளது,
என்றார்.தமிழக அரசை பாராட்டி, அ.தி.மு.க., சார்பில் மன்றத்தில்
அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.நடராஜ் ( இந்திய கம்யூ., குழு தலைவர்):
100 நாட்களில், தமிழக அரசு பல நல்ல அம்சங்களை நிறைவேற்றியதை வரவேற்பதில்
மகிழ்ச்சி; இப்பணி தொடர வேண்டும். இதற்கு இந்திய கம்யூ., துணை நிற்கும்.
புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் மூலம் குடிநீர் மற்றும் பாதாள
சாக்கடை திட்டங்களில், 30 பக்கத்துக்கு ஒப்பந்த ஷரத்துகள்
ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், பல புதிய ஷரத்துகளை ஏற்படுத்தி, மாநகராட்சி
மிகப்பெரிய தொகைகளை தர வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும். தற்போது
கொடுக்க வேண்டிய தொகையை அரசிடம் மானியமாக பெற்று வழங்க வேண்டும். அதன்பின்,
இத்திட்டங்களை மாநகராட்சியே பராமரித்து செய்தால், செல வினங்களை கண்டிப்பாக
குறைக்க முடியும். இதே கருத்தை அ.தி.மு.க., கவுன்சிலர் முருகசாமியும்
வலியுறுத்தினார். சிவபாலன் (ம.தி.மு.க.,): திருப்பூர் மாநகராட்சியில்
பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரம் அடையவில்லை; நகரம் முழுவதும்
மாசடைந்துள்ளது. சுகாதாரத்திலும் போதிய நடவடிக்கை இல்லை. இதனால்,
குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நிலம் மாசுபடுகிறது.
சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாநகராட்சியின் மெத்தனம் கண்டனத்துக்குரியது,
என்றார். பாலித்தின் காகிதத்தை உடையாக அணிந்து கூட்டத்துக்கு வந்திருந்த
ம.தி.மு.க., கவுன்சிலர்கள், மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பில்
ஈடுபட்டனர். கூட்டத்தில், 236 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன; பொது
சுகாதார பணிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான தீர்மானத்தில்,விலை
அதிகமாக இருப்பதாக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். போண்டா, வடையுடன் நோன்பு
கஞ்சிமாமன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., வினர் லட்டு தந்ததை தொடர்ந்து
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் சார்பில் நோன்பு கஞ்சி
வழங்கப்பட்டது. அதுதவிர, போண்டா, வடை, பப்ஸ், ஆப்பிள், கொய்யா துண்டுகள்
மற்றும் திராட்சை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.