கரூரில் அரசு கேபிள் "டிவி' துவக்கம்
கரூரில் அரசு கேபிள் "டிவி' துவக்கம்
கரூரில் அரசு கேபிள் "டிவி' துவக்கம்
ADDED : செப் 03, 2011 12:35 AM
கரூர்: தமிழ்நாடு அரசு கேபிள் 'டி.வி' சேவை ஒளிப்பரப்பு தொடக்க விழா கரூர் நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் உள்ள மாவட்ட தலைமை கட்டுப்பாட்டு அறையில் நடந்தது.
விழாவில் ஒளிப்பரப்பு சேவையை மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா குத்து விளக்கேற்றி துவக்கி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் 'டி.வி' யில் ஒரு லட்சம் இணைப்புகள் வழ ங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 150 கேபிள் 'டி.வி' ஆப்ரேட்டர்கள் இணைந்துள்ளனர். இந்த சேவையில் முதல் கட்டமாக மொத்தம் 90 சேனல்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஒரு இ ணைப்புக்கு மாத கட்டணமாக 70 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் 'டி.வி' கரூர் முதல் வெள்ளியணை, கரூர் முதல் வாங்கல், கரூர் முதல் வேலாயுதம்பாளையம், கரூர் முதல் சின்ன தாராபுரம், கரூர் முதல் அரவக்குறிச்சி, கரூர் முதல் மாயனூர் மற்றும் கரூர் நகர அனைத்து பகுதிகளிலும் ஒளிப்பரப்பு செய்யப்படும். விரைவில் கூடுதலாக 50 ஆயிரம் இணைப்புகள் இந்த சேவை மூலம் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக 100 கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்கள் விரைவில் கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., ஒளிபரப்பு சேவையில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கிறிஸ்துராஜ், ஆர்.டி.ஓ., சாந்தி, அரசு கேபிள் 'டி.வி' தொழில்நுட்ப ஆலோசகர் சேரன், தமிழ்நாடு கேபிள் 'டி.வி' உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.