/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டரிடம் மனுஅருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டரிடம் மனு
அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டரிடம் மனு
அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டரிடம் மனு
அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 14, 2011 12:44 AM
தூத்துக்குடி : முத்தையாபுரம், அத்திமரப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் வாடகை வீட்டில் இருந்து வரும் அருந்ததியின மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர். அத்திமரப்பட்டி பஞ்சாயத்து, முத்தையாபுரம், அம்பேர்கார்நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து கிராம மக்கள் திரண்டு வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.
அருந்ததியின சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. நீண்டகாலமாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். சுமார் 200 ஏழை, எளிய அருந்ததியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக கோரிவரும் வீட்டுமனை பிரச்னைக்கு விரைவாக தீர்வு ஏற்படுத்தி கொடுக்க ஏழை, எளிய அருந்ததி மக்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


