Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் பணியிடத்துக்கு பரிந்துரை

கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் பணியிடத்துக்கு பரிந்துரை

கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் பணியிடத்துக்கு பரிந்துரை

கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் பணியிடத்துக்கு பரிந்துரை

ADDED : செப் 08, 2011 11:19 PM


Google News
ஊட்டி : கலை பண்பாட்டு துறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்­ளது.நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கலை பண்பாட்டு துறை ஆணையரால் குரலிசை, வயலின், தேவார ஆசிரியர், நாதசுர ஆசிரியர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீலகிரி அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குரலிசை, வயலின் ஆசிரியர் பணியிடங்களுக்கு இசையில் முதுகலை அல்லது இளங்கலை பட்டம் அல்லது பட்டயம்; தேவார ஆசிரியருக்கு இசை துறையில் 5 ஆண்டுகள் குறையாமல் தொழில் முறை பணியறிவு, தேவார இசையில் பட்டம் அல்லது பட்டய தலைப்பு; நாதஸ்வர ஆசிரியருக்கு இசையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் பணியறிவு, பரத நாட்டியத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும். அனைத்திற்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம், நாதசுரத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருந்தால் உரிய துறையில் தொழில் முறையில் நல்லறிவு பெற்றிருந்தால் விதிவிலக்கு அளிக்கப்படும். 30 வயதுக்கும் மேற்பட்ட கல்விதகுதியுள்ள மனுதாரர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெறுவதை 8ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு, தனபாலன் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us