Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு கல்லூரி மறு கவுன்சிலிங்: அலைமோதிய கூட்டம்

அரசு கல்லூரி மறு கவுன்சிலிங்: அலைமோதிய கூட்டம்

அரசு கல்லூரி மறு கவுன்சிலிங்: அலைமோதிய கூட்டம்

அரசு கல்லூரி மறு கவுன்சிலிங்: அலைமோதிய கூட்டம்

ADDED : ஜூலை 11, 2011 09:40 PM


Google News
கோவை : கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான, மறு கவுன்சிலிங்கில் மாணவர்களின் கூட்டம் அலை மோதியது.அரசு கல்லூரியில் நடப்புக்கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பில் பி.ஏ., - பி.காம்.சி.ஏ., உட்பட பல்வேறு பிரிவுகளில் 1,279 இடங்கள் உள்ளன; 4,993 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மதிப்பெண் அடிப்படையில் ஜூன் கடைசி வாரத்தில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. பல்வேறு காரணங்களால் நிரப்பப்படாமல் உள்ள, 367 காலியிடங்களுக்கான மறு கவுன்சிலிங் நேற்று நடந்தது. தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க பொருளாதார நிலை இடம்கொடுக்காத பலரும், எப்படியாவது அரசு கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வருகை தந்ததால் கூட்டம் அலைமோதியது. காலியாக உள்ள குறைந்தபட்ச இடங்களில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தனர். அதேவேளையில், ஏற்கனவே, சேர்க்கை பெற்ற மாணவர்கள் சிலர் வேறு பாடப்பிரிவில் சேர முன்வந்ததால், கவுன்சிலிங் நீண்ட நேரத்துக்கு நீடித்தது. கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கியம், வணிகவியல், இயற்பியல், கணிதம் உட்பட பல்வேறு துறைகளில் 367 இடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதில், முதலில் நடந்த கவுன்சிலிங்கில் அழைப்பு கடிதம் அனுப்பியும், வராத காரணத்தால் 127 இடங்கள் உள்ளன; கவுன்சிலிங்கில் பங்கேற்றும், வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்து பலரும் சென்றால் மீதமுள்ள இடங்கள் காலியாகவுள்ளன. எனவே, இந்த இடங்களை நிரப்புவதற்கான மறு கவுன்சிலிங் இன்று (நேற்று) நடக்கிறது. மதிப்பெண் மற்றும் அந்தந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கவுன்சிலிங் நடக்கிறது. பலரும் ஏற்கனவே ஒரு பாடப்பிரிவில் சேர்ந்துவிட்டு, தற்போது வேறொரு பாடத்தை படிக்க முன்வருகின்றனர். அவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதால், காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் உடனடியாக நிரப்ப வாய்ப்பில்லை. இறுதிகட்ட கவுன்சிலிங் வரும் 29ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது, அந்தந்த பிரிவினர் வராதநிலையில், மதிப்பெண் அடிப்படையில் தகுதியான வேறு ஒருவருக்கு இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு, கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us