/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எம்.எல்.ஏ.,சரத்குமார் தகவல்சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எம்.எல்.ஏ.,சரத்குமார் தகவல்
சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எம்.எல்.ஏ.,சரத்குமார் தகவல்
சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எம்.எல்.ஏ.,சரத்குமார் தகவல்
சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எம்.எல்.ஏ.,சரத்குமார் தகவல்
ADDED : செப் 03, 2011 02:42 AM
சுரண்டை:'சுரண்டை அரசு கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார்
கூறினார்.
தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் சுரண்டை அரசு கல்லூரிக்கு வந்து ஆய்வு
செய்தார். கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை
கேட்டறிந்தார். அப்போது சரத்குமார், ''கல்லூரிக்கு இன்னும் சில நாட்களில்
தளவாட சாமான்கள் வழங்கப்பட்டு விடும். ஒரு மாதத்திற்குள் தேவையான
பேராசிரியர்களை நியமிக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கூறியுள்ளேன்.
கல்லூரி விரைவில் சொந்த கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்''
என்றார்.நாட்டார்பட்டி அ.தி.மு.க.பிரமுகர் கண்ணன் இல்ல திருமண விழா,
திரவியநகர் ச.ம.க.பிரமுகர் முருகேசன் இல்ல விழா, பாவூர்சத்திரம் ச.ம.க.துணை
செயலாளர் கணேசன் திருமண விழா, கீழக்கலங்கல் ச.ம.க.பிரமுகர் இல்ல திருமண
விழாவில் எம்.எல்.ஏ.,சரத்குமார் கலந்து கொண்டு வாழ்த்து
தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ச.ம.க.மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.வி. கணேசன்,
மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணை
செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, ஒன்றிய துணை
செயலாளர் ராமர், சிவன், கனகராஜ், வேல்முருகன் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.தென்காசியில் சர்வீஸ் ரோடு அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ.,ஆலோசனை நடத்தினார். இன்னும் சில நாட்களில்
சர்வீஸ் ரோடு பணியைதுவக்கி விடுவதாக அதிகாரிகள் சரத்குமாரிடம் உறுதி
கூறினர்.