/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி அருகே பழுதான கார் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்கோவில்பட்டி அருகே பழுதான கார் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்
கோவில்பட்டி அருகே பழுதான கார் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்
கோவில்பட்டி அருகே பழுதான கார் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்
கோவில்பட்டி அருகே பழுதான கார் மீது வாகனங்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்
ADDED : அக் 08, 2011 01:49 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரியும், லாரியின் பின்னால் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,மதுரை ராஜாமணிநகரை சேர்ந்த வடிவேலு மகன் ஜோதிமணி.
இவர் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டு மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவரது கார் கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே வந்தபோது, டயர் பஞ்சர் ஆனதாக தெரிகிறது. இதையடுத்து காரை ரோட்டோரத்தில் நிறுத்திய ஜோதிமணி, டயரை கழற்ற ஜாக்கி தேடிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கயத்தாறில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த லாரி, காரின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. மேலும் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு ஜெபக்கூட்டத்திற்கு வந்த வேன் லாரியின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வேன் டிரைவர் நெல்லை பெருமாள்புரம் பாக்கியநாதன் மகன் வில்சன் ஞானதுரை (27), வேனில் பயணம் செய்த நெல்லை டவுண் செபஸ்தியார் கோயில் தெரு அந்தோணி மனைவி மரியதேவி (42), பாளையங்கோட்டை சவேரியார் தெரு தங்கராஜ் மனைவி மேரி (65), நெல்லை துதியின் கோட்டை சர்ச் தெரு சிவனடியான் மகன் இளங்கோ (39) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் ஜெனிபர், சுகந்தி, ஆஷா, அன்புக்கரசி, அலெக்ஸ்பாண்டியன், பாக்கியம், பென்னி, ஸ்டீபன், பியூலா, சாமுவேல், ஜீவன், ஸ்டெர்லிங் ஆகியோரும் காயமடைந்தனர். நாலாட்டின்புதூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் சேர்த்தனர். இதில் இளங்கோ, மேரி, மரியதேவி ஆகிய மூவரும் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இவ்விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


