Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தீரன் நினைவு நாள்சர்வ கட்சிகள் பங்கேற்பு

தீரன் நினைவு நாள்சர்வ கட்சிகள் பங்கேற்பு

தீரன் நினைவு நாள்சர்வ கட்சிகள் பங்கேற்பு

தீரன் நினைவு நாள்சர்வ கட்சிகள் பங்கேற்பு

ADDED : ஆக 04, 2011 02:19 AM


Google News
ஈரோடு: அறச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு சர்வகட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஏழு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

கலெக்டர் காமராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகா உட்பட அதிகாரிகள் மரியாதை செய்தனர்.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜா தலைமையில், முன்னாள் யூனியன் தலைவர் சிவகுமார், ஒன்றிய செயலாளர் குணசேகரன், சச்சிதானந்தம் உட்பட பலர் மரியாதை செய்தனர்.தே.மு.தி.க., சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ., சந்திரகுமார் தலைமையில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், அவைத்தலைவர் சேர்மன், நமச்சிவாயம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us