/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/தே.மு.தி.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்தே.மு.தி.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
தே.மு.தி.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
தே.மு.தி.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
தே.மு.தி.க., ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஆக 06, 2011 02:04 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் ஒன்றிய தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் அண்டர்காட்டில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் செல்லத்துரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அணீஸ்பாண்டியன், துணை செயலாளர் பிரின்ஸ் கோபால்ராஜா, மாணவரணி செயலாளர் அருண்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், மாணவரணி ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய துணை செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 25ம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வேதாண்யம் ஒன்றியத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்தது.