ADDED : ஜூலை 13, 2011 02:35 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட
உள்ளது.நகராட்சி கமிஷனர் இசக்கியப்பன் கூறியதாவது: சொர்ண ஜெயந்தி
திட்டத்தின் கீழ் உதவித்தொகை, வேலை வாய்ப்பு உறுதியுடன் தொழிற்பயிற்சி
நடைபெறவுள்ளது.
என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி
நிலையங்களில் இந்த பயிற்சி நடைபெறும். ரெப்ரிஜிரேஷன், ஏர்கண்டிசனிங்,
எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர், பேஷன் டிசைனிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்,பெண் இருபாலரும் குறைந்த பட்ச கல்வி
தகுதியான பத்தாம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் நகராட்சியில் ஜூலை 18
ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


