/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தி.மு.க., ஆட்சி அவலம் அ.தி.மு.க.,விலும் தொடர்கிறது : பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வேதனைதி.மு.க., ஆட்சி அவலம் அ.தி.மு.க.,விலும் தொடர்கிறது : பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை
தி.மு.க., ஆட்சி அவலம் அ.தி.மு.க.,விலும் தொடர்கிறது : பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை
தி.மு.க., ஆட்சி அவலம் அ.தி.மு.க.,விலும் தொடர்கிறது : பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை
தி.மு.க., ஆட்சி அவலம் அ.தி.மு.க.,விலும் தொடர்கிறது : பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை
ADDED : ஆக 30, 2011 10:44 PM
பண்ருட்டி : தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்த அவலம் அ.தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது என நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் பேசினார்.
பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர இயல்புக் கூட்டம் நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். கமிஷனர் அருணாச்சலம், துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: ராமகிருஷ்ணன் (தி.மு.க.): மழைக்காலம் துவங்குவதால் வாலாஜா வாய்க்கால் தூர்வார வேண்டும். 5வது வார்டுக்கு தெருவிளக்கு மற்றும் குடிநீர் போர் போட நடவடிக்கை இல்லை. கமலக்கண்ணன் (அ.தி.மு.க.): 33 வார்டுகளில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளே அள்ளுவதில்லை. கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளும் தீர்வு காண்பதில்லை. கேட்டால் குப்பை அள்ளுவதற்கு லாரிகள் இல்லை என்கின்றனர். ஆனால் மாதாமாதம் லாரி சீரமைப்பதற்கு டெண்டர் தொகை வைத்து கொள்ளையடிக்கிறீர்கள். சேர்மன்: லாரிகள் மிகவும் பழமையாகி விட்டது. சீர் செய்தால் ஒரு வாரத்திற்குப்பின் மீண்டும் பழுதாகிவிடுகிறது. புதிய லாரி தான் வாங்க வேண்டும். சேகர் (அ.தி.மு.க.): கடந்த 5 ஆண்டுகளில் செட்டிப்பட்டறை காலனி பகுதியில் குப்பைகள் அள்ளுவதில்லை. குடிநீர் வசதி, சுகாதார வசதிகளும் சீராக செய்து தருவதில்லை. மனு கொடுத்து கொடுத்து கை தேய்ந்தது. மக்களின் வரிப்பணத்தில் தேவையில்லாத சுடுகாடு உள்ளிட்டவைகளில் பணம் செலவு செய்துள்ளீர்கள். தி.மு.க., ஆட்சியில் தான் இப்படி என்றால் அ.தி.மு.க., ஆட்சியில் நாங்கள் எப்படி அனுமதிப்பது. இவ்வாறு விவாதம் நடந்தது.


