/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாணவியர் கால்பந்து: கொங்கு கல்லூரி சாம்பியன்மாணவியர் கால்பந்து: கொங்கு கல்லூரி சாம்பியன்
மாணவியர் கால்பந்து: கொங்கு கல்லூரி சாம்பியன்
மாணவியர் கால்பந்து: கொங்கு கல்லூரி சாம்பியன்
மாணவியர் கால்பந்து: கொங்கு கல்லூரி சாம்பியன்
ADDED : செப் 16, 2011 09:57 PM
கோவை : பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டியில், ஈரோடு கொங்கு கலை கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரி மாணவியருக்கான கால்பந்து 'சாம்பியன்ஷிப்' சரவணம்பட்டி சங்கரா கலை அறிவியல் கல்லூரி சார்பில் கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடந்தன. ஈரோடு, கோபி, கோவை ஆகிய இடங்களை சேர்ந்த எட்டு கல்லூரிகள் 'நாக்அவுட்-லீக்' முறை போட்டியில் பங்கேற்றன. நாக்அவுட் போட்டியில் வென்ற, பாரதியார் பல்கலை, பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் கல்லூரி, கோபி பி.கே.ஆர்.,கல்லூரி, ஈரோடு கொங்கு கல்லூரி ஆகியன லீக் போட்டியில் விளையாடின. முதல் போட்டியில் கொங்கு கல்லூரி 4-0 கோல் கணக்கில் பாரதியார் பல்கலையை வென்றது. கொங்கு கல்லூரியின் அருணா, சைனி ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். இரண்டாவது போட்டியில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 4-0 கோல் கணக்கில் பி.கே.ஆர்.,கல்லூரியை வென்றது. கிருஷ்ணம்மாள் கல்லூரி யின் அஸ்வினி இரண்டு கோல்களும், தேவி, தேவப்பிரியா தலா ஒரு கோலும் அடித்தனர். மூன்றாவது போட்டியில் பாரதியார் பல்கலை 2-2 கோல் கணக்கில் பி.கே. ஆர்.,கல்லூரியுடன் 'டிரா'செய்தது. பல்கலையின் சோபனா, நான்சி தலா ஒரு கோலும், பி.கே.ஆர்.,கல்லூரியின் மஞ்சு இரண்டு கோல்களும் அடித்தனர்.பரபரப்பான நான்காவது போட்டியில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 2-2 கோல் கணக்கில் கொங்கு கல்லூரியுடன் 'டிரா' செய்தது. இருப்பினும் கோல் அடிப் படையில் கொங்கு முதலிடமும், கிருஷ்ணம்மாள் கல்லூரி இரண்டாவது இடமும், பாரதியார் பல்கலை மூன்றா வது இடமும், பி.கே.ஆர்.,கல்லூரி நான்காவது இடமும் பெற்றன. சங்கரா கலை அறிவியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி வரவேற்றார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.