ADDED : ஆக 01, 2011 02:44 AM
வெள்ளகோவில்: வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் எஸ்.பி.எம்., காம்ப்ளக்ஸில்
தே.மு.தி.க., அலுவலகம், திருப்பூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார்
முன்னிலையில், மாவட்ட மாநில மகளிரணி துணைச் செயலாளர்
சிவகாமிமுத்துக்குமார் திறந்து வைத்தார்.மாவட்ட அவைத்தலைவர் சந்திரசேகர்
தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாநில கூட்டுறவு தொழிற்சங்க துணைச்
செயலாளர் சாமிநாதன், முத்தூர் பேரூர் கழக செயலாளர் பெரியசாமி, காங்கேயம்
ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் துரைரவிச்சந்திரன் உட்பட
பலர் பங்கேற்றனர்.திருப்பூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் முன்னிலையில்
கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தில் இருந்து, கொங்குநாடு முன்னேற்றக்கழக நகர
செயலாளர் சக்திவடிவேல் தலைமையில் பலர் தே.மு.தி.க.,வில் இணைந்தனர்.மாவட்ட
செயலாளர் தினேஷ்குமார் பேசுகையில், ''கட்சி துவங்கியபோது ஏற்கனவே 70 கட்சி
உள்ளது. இது 71வது கட்சி என்று கூறியவர்கள் வாயடைத்துப்போகும்படி
இக்கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இயக்கத்தில் உள்ள நமக்கும்
ஒரு சில பயன் இருக்க வேண்டும். அதேபோன்று கட்சிக்காக நாமும் பாடுபட
வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்,''
என்றார்.வெள்ளகோவில் நகர செயலாளர் மணி வரவேற்றார்.நகர பொருளாளர் செல்வராஜ்
நன்றி கூறினார்.