Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/குண்டு பாய்ந்து வாலிபர் பலி ஏற்காடு மலைக்கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை

குண்டு பாய்ந்து வாலிபர் பலி ஏற்காடு மலைக்கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை

குண்டு பாய்ந்து வாலிபர் பலி ஏற்காடு மலைக்கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை

குண்டு பாய்ந்து வாலிபர் பலி ஏற்காடு மலைக்கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை

ADDED : செப் 18, 2011 01:13 AM


Google News

ஏற்காடு: ஏற்காட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலியானதை தொடர்ந்து, போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சேலம் அடுத்த ஏற்காடு, தெப்பக்காடு கிராமம், காசிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வராஜ் (18). கடந்த 3ம் தேதி, வீட்டுக்கு அருகே, முட்புதரில் கண்டெடுத்த நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி, செல்வராஜ் முயல்வேட்டையில் ஈடுபட்டுள்ளார். எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், செல்வராஜ் படுகாயமடைந்தார். அவரை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



அதையடுத்து, முட்புதருக்கு நாட்டுத்துப்பாக்கி வந்த மர்மம், நக்ஸல் ஊடுருவல் மற்றும் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் தமிழ்செல்வன், சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பூபதிராஜன், குணசேகரன், சலீம் மற்றும் 125 போலீஸார், 4 பிரிவாக சென்று சோதனை நடத்தினர். தெப்பக்காடு, குண்டூர், ஆணைக்காடு, சொணப்பாடி, கொண்டையூர் உள்ளிட்ட அடர்ந்த மலைக்கிராம பகுதிகளில் வீடு, வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதோடு, அன்னியர் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 6 மணியளவில் துவங்கிய சோதனை, மாலை வரை நீடித்தது. 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட மலைப்பரப்பில் சோதனை நடத்தப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us