ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
ஓசூர்: ஓசூர் அடுத்த மத்திகிரி முனிஸ்வரன் கோவில் அருகே சிலர் சீட்டாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
எஸ்.ஐ., ரஜினி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சீட்டு விளையாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (34), பிதோஷ் (24), பாட்ஷா (30) என்பது தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள், ரொக்க பணம் 1.000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.