ADDED : ஆக 22, 2011 10:54 PM
கோவை : மேக்ஸ் ஹைபர்மார்க்கெட் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்பார் ஹைபர்மார்க்கெட் திறப்பு விழா, புரூக்பீல்ட்ஸில் நடந்தது.
மேக்ஸ் ஹைபர் மார்க்கெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வினய் சிங் கூறியதாவது: துபாயில் செயல்படும் லேண்ட்மார்க் குரூப்பின் ஓர் அங்கமான மேக்ஸ் ஹைபர்மார்க்கெட் இந்தியா நிறுவனம், இந்தியாவில் ஸ்பார் பிராண்ட் ஹைபர் மார்க்கெட்டுகளை துவக்க, ஸ்பார் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமம் பெற்றுள்ளது. அதன்கீழ் தற்போது கோவையில் முதன்முறையாகவும், இந்தியாவில் பெங்களூர், ஹைதராபாத், மங்களூர், புனே நகரங்களுக்கு அடுத்து ஒன்பதாவதாக, இந்த அதிநவீன ஹைபர்மார்க்கெட் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பொருட்களை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகவும், சிக்கனமாகவும், புதிய அனுபவமாகவும் இருக்கும். உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களை முதலில் வரவேற்பது குழந்தைகள் உலகம். அடுத்து சமையலறை உலகம், ஆடைகள், பரிசு பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், அழகு பொருட்கள், இறுதியில் 'ஃப்ரஷ்' உலகம், என வரிசையாக உள்ளது. இவற்றில் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகள் முதல் உள்ளூர் நிறுவனங்களின் தயாரிப்புகள் வரை, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன. மீன் பிரியர்களுக்கென ஏரி மீன், கடல் மீன் உள்ளிட்ட அனைத்து மீன்களும் கிடைக்கும் வகையில் தனி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் 'தினசரி குறைந்த விலை, பெஸ்ட் டீல்' திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களின் கீழ் வாடிக்கையாõளர் மிகக்குறைந்த விலையில் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம், என்றார்.