ADDED : ஆக 11, 2011 11:22 PM
சிறுமுகை : கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்கக்கோரி, கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் சிறுமுகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'கூட்டுறவு மற்றும் அனைத்து நெசவாளர்களுக்கும் 25 சதவீதம் கூலி உயர்வு அளிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை 'கோ - ஆப்டெக்ஸ்' மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி தொழில் செய்யும் பெண்களுக்கு ஓய்வு ஊதிய வயதினை 50 ஆக குறைக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜகோபால், பொருளாளர் ராமசாமி, துணைச் செயலாளர் பொன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.