/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உழவர் பாதுகாப்பு அட்டைசரிபார்க்கும் பணி துவக்கம்உழவர் பாதுகாப்பு அட்டைசரிபார்க்கும் பணி துவக்கம்
உழவர் பாதுகாப்பு அட்டைசரிபார்க்கும் பணி துவக்கம்
உழவர் பாதுகாப்பு அட்டைசரிபார்க்கும் பணி துவக்கம்
உழவர் பாதுகாப்பு அட்டைசரிபார்க்கும் பணி துவக்கம்
ADDED : செப் 18, 2011 09:44 PM
கடலூர்:தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டையில் உள்ள விவரங்கள்
சரிபார்க்கும் பணி துவங்கியது.தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற
விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு 'முதல்வரின் உழவர் பாதுகாப்பு
திட்டம்' என்ற பெயரில் புதியதாக அடையாள அட்டை விரைவில் வழங்கப்பட உள்ளது.
கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 57 ஆயிரத்து 844, பண்ருட்டியில் 78
ஆயிரத்து 712, சிதம்பரத்தில் 66 ஆயிரத்து 153, காட்டுமன்னார்கோவிலில் 52
ஆயிரத்து 807, விருத்தாசலத்தில் 64 ஆயிரத்து 538, திட்டக்குடியில் 61
ஆயிரத்து 387 என மாவட்டத்தில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 441 விவசாயிகள்
மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட
உள்ளது.இந்நிலையில் அடையாள அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட
விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியும், அட்டையில் அரசின்
முத்திரையை ஸ்டிக்கராக ஒட்டும் பணியும் கடலூர் மக்கள் குறைகேட்பு அரங்கில்
நேற்று துவங்கியது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயச்சந்திரன்
மேற்பார்வையில் வருவாய்த்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.