ADDED : செப் 20, 2011 01:06 AM
காரமடை : காளம்பாளையத்தில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு, 1008 பால்குடம்
அபிஷேகம் செய்யப்பட்டது.
காரமடையை அடுத்த காளம்பாளையத்தில் ஸ்வர்ண வேலாயுத
மலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மகா
கும்பாபிஷேகம் கடந்த வாரம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து
வருகின்றன. காளம்பாளையம் கிராம பெண்கள் ஊரிலிருந்து 1008 பால்குடங்களை
எடுத்துக் கொண்டு சுவாமி மலைக்கு 4 கி.மீ., தூரம் ஊர்வலமாக சென்றனர்.
மருதம்மாள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சுவாமிக்கு பால் அபிஷேகம்
செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் கந்தசாமி, நாகராஜ், துரைசாமி,
பொன்னுசாமி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


