ADDED : ஜூலை 13, 2011 02:22 AM
திருவெறும்பூர்: துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மகன் செந்தில்குமார்(35).
இப்பகுதியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். என்.ஐ.டி., சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, அங்கு ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது இவர் சென்ற டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை, அருகில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். துவாக்குடி போலீஸார் விசாரிக்கின்றனர்.


