/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் பணிமனைஉற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் பணிமனை
உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் பணிமனை
உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் பணிமனை
உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் விவசாயிகளுடன் கலந்துரையாடல் பணிமனை
ADDED : ஆக 03, 2011 09:59 PM
கடலூர் : விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்து வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் பணிமனை கடலூரில் நடந்தது.
வேளாண் விற்பனை மற்றும் வணிகக்துறை மற்றும் நீர்வள நிலவள திட்டம் சார்பில் கெடிலம் வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு விளை பொருட்களை சந்தைப் படுத்துதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தனவேல் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்களே வியாபாரிகளாகி பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இடைதரகர்கள் இல்லாமல் லாபமடைவது, பொருட்களின் தற்போதைய சந்தை மற்றும் விலை நிலவரம். உற்பத்தி பொருட்களை உடன் விற்பனை செய்லாமா அல்லது இருப்பு வைத்து விற்பனை செய்வது சிறந்ததா என்பது முடிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். உதவி கள அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, விருத்தாசலம் வேளாண்மை ஆராய்சி நிலைய பேராசியர் கண்ணன், கடலூர் மாவட்ட மதிப்பூட்டப்பட்ட உணவு உற்பத்தியாளர் நலச் சங்க மணிமொழி, வேளாண் அலுவலர்கள் சித்ரா, ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.