சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 26, 2011 01:44 AM
புதுச்சேரி : சங்கராமன் கொலை வழக்கில் எதிர்தரப்பு சாட்சிகள் யாரும் நேற்று ஆஜராகாததால் வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர் உட்பட 24 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். காஞ்சிபுரம் கோர்ட்டில் நடந்த வந்த கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரியிலுள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. கடந்த 18ம் தேதியிலிருந்து கொலை வழக்கில், ஏற்கனவே கோர்ட்டில் சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்த விபரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 313ன்படி பகுதி, பகுதியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ரகு, சுந்தரேச அய்யர் உள்பட ஏழு பேர் ஆஜராகினர். கோர்ட்டில் ஆஜராகாதவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்தரப்பு சாட்சிகள் யாரும் நேற்று ஆஜராகவில்லை. இதனையடுத்து இவ்வழக்கை ஆகஸ்ட் 5 ம்தேதிக்கு முதன்மை நீதிபதி ராமசாமி ஒத்தி வைத்தார். ஆகஸ்ட் 5ம் தேதியும் சாட்சிகள் வராவிட்டால், வக்கீல்களின் வாதங்கள் துவங்கும் என தெரிகிறது.
வியர்வையில் குளித்த சைனியின் கோர்ட்
பாட்டியாலா கோர்ட்டில், ராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார் ஆஜராகி வாதாடினார். அவர் மூன்று மணிநேரம் வாதாடினார். நேற்று, சைனி கோர்ட் அறையில் உள்ள 'ஏசி' பழுதாகி விட்டது. ராஜா தரப்பு வாதம் என்பதால் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்ளும் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்டனர். இதனால், அனைவரும் வியர்வையில் குளித்தனர். நேற்றைய வாதத்தின் போது, ராஜாவின் மனைவி மற்றும் கனிமொழி ஆகியோர் வந்திருந்தனர். மற்றபடி, அரசியல்வாதிகளோ, வழக்கமாக வரும் பிரமுகர்களோ வரவில்லை.


