Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி

பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி

பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி

பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி

ADDED : ஆக 31, 2011 01:04 AM


Google News

ராசிபுரம்: 'பார்த்தீனியம் களைச் செடிகளை அளிக்க, இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது' என, எலச்சிப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராசிபுரம் அடுத்த எலச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில், பார்த்தீனியம் களைச் செடி அதிக அளவில் வளர்ந்துள்ளது.

இச்செடியின் விதைகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி, விரைவில் பரவும் தன்மை கொண்டது. கையுறை அணிந்து கொண்டு பூப்பதற்கு முன், செடிகளை அழித்து விட வேண்டும். அச்செடிகள் முளைத்த பின், வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும். பயிர் சாகுபடி செய்யும் நிலங்களில், துலுக்க சாமந்தி பூச்செடியை மழை காலங்களில் சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்.



கரும்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் போது, பார்த்தீனிய களைச் செடிகள் முளைக்காமல் தடுக்க, லிட்டருக்கு நான்கு கிராம் அட்ரசின் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். பயிர் சாகுபடி இல்லாத இடங்களில் முளைத்துள்ள பார்த்தீனிய களைச்செடிகளை அழிக்க, லிட்டருக்கு 200 கிராம், சமையல் உப்புடன் 2 மில்லி டீ பால், அல்லது 10 கிராம் 2:4 டி., சோடியம் உப்புடன் 20 கிராம் அமோனியம் சல்பேட், இரண்டு மில்லி சோப்பு கரைசல் கலந்தும் செடிகள் மீது தெளிக்கலாம். 15 மில்லி கிளை போசேட்டுன் 20 கிராம் அமோனியம் சல்பேட், இரண்டு மில்லி சோப்பு கரைசல் கொண்டும் அழிக்கலாம். லச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட சின்னமணலி, மாவுரெட்டிப்பட்டி, ராயர்பாளையம், உஞ்சனை உள்ளிட்ட கிராமப்புறங்களில் பார்த்தீனியம் களைச் செடிகளை அழிக்க இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us