/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி: அரசு முதன்மை செயலர் திடீர் ஆய்வுபிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி: அரசு முதன்மை செயலர் திடீர் ஆய்வு
பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி: அரசு முதன்மை செயலர் திடீர் ஆய்வு
பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி: அரசு முதன்மை செயலர் திடீர் ஆய்வு
பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி: அரசு முதன்மை செயலர் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2011 01:32 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்தானம் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அரசு முதன்மை செயலாளர் சந்தானம் நேற்று ஆய்வு செய்தார்.
விடுதியில் சமையலறை கூடம், உணவுகள், சிலிண்டர் அறை, கழிப்பறை, மாணவிகள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தார்.விடுதியில் நடத்தும் மாத தேர்வுகள் மதிப்பெண்களை கணக்கேட்டில் எழுதி வைக்கவேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என கூற வேண்டும். இங்கிருந்து செல்லும் மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற்று வெளியே செல்ல வேண்டும் என விடுதி வார்டனிடம் முதன்மை செயலாளர் சந்தானம் கூறினார். கலெக்டர் மணிமேகலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுதேவன் உடனிருந்தனர்.