/உள்ளூர் செய்திகள்/தேனி/வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
வனப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
ADDED : செப் 29, 2011 12:43 AM
கூடலூர் : லோயர்கேம்ப் வனப்பகுதியில் கழிப்பறை கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.கழிப்பறை கழிவுகளை சுத்தம் செய்வற்காக லாரிகளில் பொறுத்தப்பட்ட 'செப்டிக் டேங்க் கிளீனர்' மூலம் அகற்றும் பணியில் கம்பத்தைச் சேர்ந்த தனியார் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையோரத்தில் உள்ள கேரள பகுதிகளில், கழிப்பறை தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேகரிக்கப்படும் கழிப்பறை கழிவுகளை அப்பகுதியில் கொட்ட அனுமதி மறுப்பதால், அதை தமிழகப்பகுதியான குமுளியில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் மலைப்பாதையில் கொட்டிவிடுகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்தும், தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், லோயர்கேம்பில் இருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


