/உள்ளூர் செய்திகள்/மதுரை/சென்னை - கன்னியாகுமரி கடற்கரை ரோடு : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்சென்னை - கன்னியாகுமரி கடற்கரை ரோடு : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை - கன்னியாகுமரி கடற்கரை ரோடு : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை - கன்னியாகுமரி கடற்கரை ரோடு : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை - கன்னியாகுமரி கடற்கரை ரோடு : வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2011 01:37 AM
மதுரை : சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடற்கரை ரோடு அமைத்து, போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும், என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் சம்பத்திடம், சங்க தலைவர் ஜெயபிரகாசம் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மாநிலத்தில் மின்பற்றாக்குறையை நீக்க தொலை நோக்கு பார்வையுடன் புதிய திட்டங்கள் வகுத்தும், பால் உற்பத்தியை அதிகரித்து பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும்.
நதிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீர்வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களையும் எழும்பூரில் இருந்து இயக்க வேண்டும், மோனா ரயில் திட்டத்தை மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைகள் அமைத்து போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்த வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது.


