/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நீதித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்நீதித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நீதித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நீதித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
நீதித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 16, 2011 12:00 AM
தூத்துக்குடி : நீதித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை ஓய்வூதிய சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் தலைவர் ஞானராஜ் தலைமையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் சங்க செயலாளர் சண்முகவேலாயுதம், பொருளாளர் அனந்தபத்மநாபன், துணைத் தலைவர் சொக்கலிங்கம், தமிழ்நாடு நீதித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப்பணியாளர் சங்க தலைவர் நடராஜன், மதுரை சங்க செயலாளர் ராமசாமி, பொருளாளர் ரத்தினகிரி, சட்ட ஆலோசகர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மத்திய அரசு போல் குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவப்படியாக 300 ரூபாய் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு அரசே நேரடியாக ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ செலவு ஈடு செய்யும் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியர் சேர இந்தாண்டு இறுதிவரை கால அவகாசம் நீட்டித்து ஆணை வழங்கிட வேண்டும், ஓய்வூதியர் எந்த தேதியில் இறந்தாலும் அந்த மாதத்தின் ஓய்வு ஊதியத்தை முழுமையாக அவர் தம்குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்பது உட் பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


