/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா துவக்கம்திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா துவக்கம்
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா துவக்கம்
ADDED : ஆக 08, 2011 03:50 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உபக் கோயிலான வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கொடிப்பட்டம் திருவீதி உலா சென்று கோயிலை வந்தடைந்தது. அதன்பின் காலை சிவானந்தம் வல்லவராயரால் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரம் தர்ப்பை புல்களாலும், பட்டாடை மற்றும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு சோடச தீபாராதனை நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்பாள் விழாக் காலங்களில் தினசரி காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் கோயில் வளாகத்தில் தினசரி இரவு பக்தி சொற்பொழிவு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் செய்து வருகின்றனர். இந்த கொடியேற்று விழாவில் கோயில் கண்காணிப்பாளர் செல்வக்குமாரி, அலுவலர் பிச்சையா, புரொபஷனல் கண்ணன், கோயில் மணியம்மது, காந்தி காமராஜர் மார்க்கெட் தலைவர் திருப்பதி, ஆலோசணைக் குழு இணை காரிய தரிச பாலசுப்பிரமணியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


