/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/மலையிலிருந்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலிமலையிலிருந்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
மலையிலிருந்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
மலையிலிருந்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
மலையிலிருந்து லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
ADDED : ஆக 30, 2011 12:08 AM
பெரம்பலூர்: நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடி தீபம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சதீஸ் (35).
இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் மலைக்குவாரியிலிருந்து டிப்பர் லாரியில் கருங்கல் லோடு ஏற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்தார். மலையின் பாதி பகுதியில் டிப்பர் லாரி வந்தபோது பிரேக் கட்டாகி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து சரிந்து லாரி கீழே விழுந்தது.
இதில், டிப்பர் லாரி டிரைவர் சதீஸ், லாரி கிளினர் நாகை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி மகன் உலகநாதன் (17) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பெரம்பலூர் போலீஸார், விபத்துக்குள்ளானவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் சதீஸ் உயிரிழந்தார். உலகநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கவுல்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் வி.ஆர்., புளுமெட்டல் மேலாளரான ராமநாதபுரம் மாவட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்த துரைபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் விசாரிக்கிறார்.


