/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிறக்கும் 125 குழந்தைகளில் ஒருவருக்கு இதய நோய் இருப்பதாக "பகீர்' தகவல்பிறக்கும் 125 குழந்தைகளில் ஒருவருக்கு இதய நோய் இருப்பதாக "பகீர்' தகவல்
பிறக்கும் 125 குழந்தைகளில் ஒருவருக்கு இதய நோய் இருப்பதாக "பகீர்' தகவல்
பிறக்கும் 125 குழந்தைகளில் ஒருவருக்கு இதய நோய் இருப்பதாக "பகீர்' தகவல்
பிறக்கும் 125 குழந்தைகளில் ஒருவருக்கு இதய நோய் இருப்பதாக "பகீர்' தகவல்
ADDED : செப் 25, 2011 01:12 AM
ஈரோடு: ''பிறக்கும் 125 குழந்தைகளில் ஒரு குழந்தை, பிறவியிலேயே இதயக் கோளாறு கொண்டுள்ளது,'' என, 'அப்பல்லோ' குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: இது மிகவும் பரவலாக காணப்படும் பிறவிக் கோளாறாகும்.
கருவில் இருக்கும் குழந்தை எவ்வித பிரச்னையுமின்றி நன்றாக உள்ளதா? என்பதை, '3டி எக்கோகார்டியோகிராம்' கருவி மூலம், கர்ப்பமான 18 வாரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். இச்சோதனையை ஓரளவு வசதியுள்ளோர் செய்து, குழந்தையை காத்துக் கொள்கின்றனர். வசதியற்றோர் நிதியாதாராம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், இச்சோதனையை செய்வதில்லை. இதனால், இதய நோய்களால் பெருமளவில் பாதிக்கப்படுவது ஏழ்மை நிலையில் உள்ளோரின் குழந்தைகள்தான்.
இவ்வகை இதய நோய் ஆப்ரேஷனுக்கு 1.60 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஏழ்மை நிலையிலுள்ளோரால் இதை செய்ய முடியாததால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளன. இந்த சூழ்நிலையிலுள்ள குழந்தைகளை காப்பாற்றும் வகையில், அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, ரோட்டரி, ஐ.எம்.ஏ., உள்பட பல்வேறு அமைப்புகளின் நிதியுதவியுடன், பல்வேறு ஊர்களில் ஆண்டுக்கு 10 முகாம்கள் வீதம் நடத்தி, இதய நோய் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, இதுவரை 700க்கும் அதிகமான குழந்தைகளுக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.