/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கைபண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை
பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை
பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை
பண்ருட்டியில் செயற்கை நீரூற்று அழகுபடுத்த கோரிக்கை
ADDED : ஆக 11, 2011 11:01 PM
பண்ருட்டி : பண்ருட்டியில் காமராஜர் சிலை, அண்ணா துரை சிலை எதிரில் உள்ள செயற்கை நீரூற்று செயல்படுத்தி அழகுபடுத்திட நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி பஸ்நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை, நான்குமுனை சந்திப்பில் உள்ள அண் ணா துரை சிலை அருகில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங்பேடி முயற்சியின் பேரில் செயற்கை நீரூற்று நகராட்சியால் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பின் செயற்கை நீரூற்று செயல்படுத்த நகராட்சி அதிகாரிகள் முன்வராததால் அழுகிப்போன பலாப்பழ கழிவுகளைக் கொட்டி வீணாக்கி வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நகராட்சி அதிகாரிகள் அண் ணா துரை சிலை, காமராஜர் சிலை முன்பு உள்ள செயற்கை நீரூற்று மீண்டும் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.