ADDED : செப் 23, 2011 12:56 AM
திண்டுக்கல் : அடுத்தவர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தென்னை மரம், வீட்டை சேதப்படுத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளீதரன், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் தர்மர். இவருக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ளது. கடந்த ஆட்சியின் போது, இவரது நிலத்தில் அத்துமீறி நுழைந்து தென்னை மரங்கள், வீடு, மோட்டார் ஆகியவற்றை சேதப்படுத்தினார். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார், ஆத்தூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் முரளீதரன், கான், நடராஜன், ரமேஷ், ரபீக் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் முரளீதரன் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் லதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.