ADDED : செப் 24, 2011 09:58 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக 'மெக்கட்ரான்ஸ்-11' தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது.
திருச்சி தேசிய தொழில் நுட்ப உற்பத்தி துறை ஆசிரியர் நூருல் ஹக் துவக்கி வைத்தார். துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் சின்னத்துரை அப்துல்லா சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் சிறந்தவற்றிற்கு பரிசு வழங்கபட்டது. ராம்குமார் நன்றி கூறினார்.


