/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொண்டாமுத்தூரில் 437 வேட்பாளர் போட்டிதொண்டாமுத்தூரில் 437 வேட்பாளர் போட்டி
தொண்டாமுத்தூரில் 437 வேட்பாளர் போட்டி
தொண்டாமுத்தூரில் 437 வேட்பாளர் போட்டி
தொண்டாமுத்தூரில் 437 வேட்பாளர் போட்டி
ADDED : அக் 15, 2011 02:05 AM
பேரூர் : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
பதவிக்கு 6 பேர், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு 56 பேர், ஊராட்சி
தலைவர் பதவிக்கு 48 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 437 பேர்
போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையமான, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில், மொத்தம் 45 மேஜைகள் போடப்பட்டுள்ளது. 50
வாக்குச்சீட்டுகள் அடங்கிய பண்டல்களாக கட்டியபின் எண்ணப்படுகின்றன. வாக்கு
எண்ணிக்கை, 21ம் தேதி காலை 7 மணிக்கு துவங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை மையம்: ஆலாந்துறை அரசுமேல்நிலைப்பள்ளியில், ஆலாந்துறை,
தென்கரை, பூலுவபட்டி பேரூராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும்,
வடவள்ளி மருதமலை தேவஸ்தான அரசு மேல்நிலைப்பள்ளியில், தொண்டாமுத்தூர்,
தாளியூர், பேரூர், வேடபட்டி பேரூராட்சி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.


