/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உபகரணமின்றி வகுப்பு நடத்தக்கூடாது :ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கைஉபகரணமின்றி வகுப்பு நடத்தக்கூடாது :ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
உபகரணமின்றி வகுப்பு நடத்தக்கூடாது :ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
உபகரணமின்றி வகுப்பு நடத்தக்கூடாது :ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
உபகரணமின்றி வகுப்பு நடத்தக்கூடாது :ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
ADDED : ஆக 25, 2011 11:51 PM
திருப்பூர் : கல்வி உபகரணங்கள் தயாரிக்க, திருப்பூர் ஒன்றியத்துக்கு
உட்பட்ட 204 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1,350 ஆசிரியர்
களுக்கு, மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் ஆசிரியர் மானியம்
வழங்கப்படுகிறது.
வருங்காலத்தில் கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் இன்றி
கற்பித்தல் நிகழ்வு, பள்ளிகளில நடக்கக்கூடாது என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.பாடப்பகுதிகளை மாணவர்கள் தெளிவாக அறியவும்,
படைப்பாற்றலை தூண்டும்படி பாடப்பகுதிகளை கற்பிக்கவும், கற்றல், கற்பித்தல்
உபகரணங்களை ஆசிரியர் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு ஆசிரியருக்கு தலா
500 ரூபாய் என வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தொகை
வழங்கப்படாமல் இருந்தது. தற்போது முதல்கட்டமாக ஆசிரியர்களுக்கு ரூ.250
வழங்கப்படுகிறது. திருப்பூர் ஒன்றியத்தில் 100 தொடக்கப்பள்ளிகளில்
பணியாற்றும் 398 ஆசிரியர்களுக்கு 99 ஆயிரத்து 500 ரூபாய், 77
நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 762 ஆசிரியர்களுக்கு ஒரு லட்சத்து 500; 12
உயர்நிலைபள்ளிகளில் உள்ள 56 ஆசிரியர்களுக்கு 14 ஆயிரம்; 15
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 134 ஆசிரியர்களுக்கு 33 ஆயிரத்து 500 என மொத்தம்
மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு
அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குனரகம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:ஒவ்வொரு ஆசிரியரும், வகுப்பு, பாடம் வாரியாக கடினப்பகுதிகளை
ஆய்வு செய்து, கற்பிக்க தேவையான உபகரணங்களை செய்ய தேவையான பொருட்களில்,
எளிதாக சேகரிக்க வேண்டிய பொருட்கள் மற்றும் கடையில் வாங்க வேண்டிய
பொருட்களை தரமானதாக வாங்க வேண்டும்.உபகரணங்களை செய்ய வேண்டிய
மூலப்பொருட்கள் வாங்க மட்டுமே மானியத்தை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்;
கடையில் இருந்து உபகரணமாகவே வாங்குவதை தவிர்க்க வேண்டும்; தயாரிக்கப்பட்ட
உபகரணங்கள் பற்றிய அறிக்கையை தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க
வேண்டும்.வரும் காலத்தில் கற்றல், கற்பித்தலில் உபகரணங்கள் இல்லாமல்
கற்பித்தல் நிகழ்வு பள்ளிகளில் நடக்கக் கூடாது; உபகரணங்களை வகுப்பறையில்
கற்பித்தல் நிகழ்வுகளில் பயன்படுத்துவதை கிராமக்கல்விக்குழு, பெற்றோர்
ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகக்குழு கண்காணிக்க வேண்டும், என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.