/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை மனுதாக்கல்தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை மனுதாக்கல்
தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை மனுதாக்கல்
தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை மனுதாக்கல்
தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை மனுதாக்கல்
ADDED : செப் 28, 2011 12:41 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இது குறித்து பெரியசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக திமுக தலைவர் கருணாநிதியில் அறிவிக்கப்பட்டுள்ள பொன் இனிதா நாளை (29ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார். காலை 9 மணிக்கு தூத்துக்குடி புதிய பஸ்ஸ்டாண்ட் போத்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி, வ.உ.சி, குரூஸ்பர்னாந்து சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். அங்கிருந்து மாதா கோயிலுக்கு சென்றுவிட்டு வ.உ.சி மார்கெட் அருகே உள்ள காமராஜ் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன் பின்னர் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் மூன்றாம் மைலில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் அங்கிருந்து காய்கறி மார்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.