/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடத்தில் ரூ. 57 லட்சம் எரிசாராயம் அழிப்புபல்லடத்தில் ரூ. 57 லட்சம் எரிசாராயம் அழிப்பு
பல்லடத்தில் ரூ. 57 லட்சம் எரிசாராயம் அழிப்பு
பல்லடத்தில் ரூ. 57 லட்சம் எரிசாராயம் அழிப்பு
பல்லடத்தில் ரூ. 57 லட்சம் எரிசாராயம் அழிப்பு
ADDED : செப் 25, 2011 01:10 AM
பல்லடம் :இரு ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றப்பட்ட ரூ.
57 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை, பல்லடம் போலீசார் தீ வைத்து அழித்தனர்.பல்லடம் அடுத்த மாதப்பூர் பெட்ரோல்பங்க் பின்புறம் ஓட்டல் உள்ளது; இதன் உரிமையாளர்கள் பொங்கலூரைச் சேர்ந்த ஆனந்த், செந்தில்குமார். கடந்த 2009ம் ஆண்டு ஆக., 3ம்தேதிஓட்டலுக்கு கண்டெய்னர் லாரியில்( டி.என். 31 ஆர். 5623) வந்த டிரைவர், கிளீனர் ஆகியோர் சாப்பிட்டனர்; லாரியை எடுக்காமல் சென்று விட்டனர்; 5ம்தேதிவரை லாரி அங்கேயே நிறுத்தப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அப்போதைய திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாந்தி தலைமையில் பல்லடம் போலீசார் லாரியில் சோதனை நடத்தினர்; லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 300 பிளாஸ்டிக் கேன்களில் 10 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரிந்தது.எரிசாராயத்துடன் இருந்த லாரி, பின், பல்லடம் கோர்ட்டுக்கு எடுத்து வரப்பட்டு பின், லாரியில் இருந்த எரிச்சாராயம் ஸ்டேஷனில் உள்ள ஒரு அறையில் பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டது. லாரியை முறைப்படி ஏலம் விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எரிச்சாராயம் ஸ்டேஷனில் இருந்ததால் கடும் நெடி வந்தது; பல்லடம் போலீசார் சாராயத்தை அழிக்க கலால்துறையினரிடம் ஒப்புதல் பெற்றனர்.நேற்று காலை திருப்பூர் கலால் உதவி ஆணையர் சசிகலா முன்னிலையில், பல்லடம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் கென்னடி, பெரியார் ஆகியோர் 10 ஆயிரத்து 500 லிட்டர் எரிச்சாராயத்தை, லாரி மற்றும் ஆட்டோவில் எடுத்து சென்று பெத்தாம்பாளையம் குட்டையில் ஊற்றி, தீ வைத்து அழித்தனர்.தீவைத்து அழிக்கப்பட்ட எரிச்சாராயத்தின் மதிப்பு ரூ. 57 லட்சம்; சந்தை மதிப்பு ரூ. 1.50 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.