/உள்ளூர் செய்திகள்/கரூர்/தென்னிலையில் பழுதடைந்த மின் கம்பம்மாற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்: மக்கள் முடிவுதென்னிலையில் பழுதடைந்த மின் கம்பம்மாற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்: மக்கள் முடிவு
தென்னிலையில் பழுதடைந்த மின் கம்பம்மாற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்: மக்கள் முடிவு
தென்னிலையில் பழுதடைந்த மின் கம்பம்மாற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்: மக்கள் முடிவு
தென்னிலையில் பழுதடைந்த மின் கம்பம்மாற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம்: மக்கள் முடிவு
ADDED : ஜூலை 17, 2011 02:07 AM
க.பரமத்தி: தென்னிலை அடுத்துள்ள தொப்பம்பட்டியில் அமைந்துள்ள மின் டிரான்ஸ்ஃபார்மரை தாங்கி நிற்கும் இருமின் கம்பங்களும் சிமெண்ட் காரை பெயர்ந்து எழும்பு கூடாக காட்சிளிக்கிறது.
இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இவற்றை பராமரிக்காத தென்னிலை மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த பகுதிமக்கள் முடிவு செய்துள்ளனர்.தென்னிலை கிழக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டியில் 110 கி.வாட் கொண்ட டிரான்ஸ்ஃபாமர் உள்ளது. இதில் இருந்து தொப்பம்பட்டி, ஒண்டியூர், எல்லைமேடு, வோங்காட்டூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. டிரான்ஸ்ஃபார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் இரண்டும் சிமெண்ட் காரை பெயர்ந்து எழும்பு கூடுபோல நிற்கும் கம்பத்தில் மின்சாரம் தாக்கி அடிக்கடி மின்சாதனங்கள் பழுதடைந்து வருவதுடன், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள 50க்கு மேற்பட்ட விவசாய மின்மோட்டார்கள், வீட்டு உபயோக மின்சாதனங்களும் பழுதடைகிறது. இதுகுறித்து தென்னிலை மின்வாரியத்திடம் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றக்கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பகுதிமக்கள் கூறுகையில்,' பழுதடைந்துள்ள டிரான்ஸ்ஃபார்மர் மின்கம்பங்கள் மாற்றக்கோரி தென்னிலை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் மின்வாரிய அலுவலர்கள் கண்டும்காணாமல் உள்ளனர். மேலும், தற்போது ஆடி காற்று அதிகமாக வீசுவதால் ஏற்கனவே பழுதடைந்த மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இவற்றை மாற்ற தவறிய மின்வாரியத்தை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.