/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ஆபாச எம்.எம்.எஸ்., அனுப்பிய தகராறு: மூன்று வாலிபர் கைதுஆபாச எம்.எம்.எஸ்., அனுப்பிய தகராறு: மூன்று வாலிபர் கைது
ஆபாச எம்.எம்.எஸ்., அனுப்பிய தகராறு: மூன்று வாலிபர் கைது
ஆபாச எம்.எம்.எஸ்., அனுப்பிய தகராறு: மூன்று வாலிபர் கைது
ஆபாச எம்.எம்.எஸ்., அனுப்பிய தகராறு: மூன்று வாலிபர் கைது
மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூர் கம்பர் தெருவில் இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதில் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய மூன்று வாலிபர்களை கூத்தாநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.
எஸ்.எம்.எஸ்., அனுப்பிய மொபைல்ஃபோன் எண், மொபைல்ஃபோன் கடை வைத்திருக்கும் குமார் என்பவருடையது என்பதை அறிந்து செந்தில்குமார் அவரது நண்பர்கள் லோகநாதன், பிரதாப், கேசவன் ஆகியோர் மொபைல் ஃபோன் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளனர். வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதால் குமாரின் நண்பரான முகம்மது காசிம் சமாதானம் செய்ய முயன்ற போது கத்தி குத்து அவருக்கு விழுந்தது. உயிருக்கு போராடிய அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த கூத்தாநல்லூர் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகநாதன் (27), கேசவன் (28), செந்தில்குமார் (29) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.