Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூலை 27, 2011 11:07 PM


Google News

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொது நலசங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.செழியன் தலைமை தாங்கினார்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். செயலர் கலிவரதன் வரவேற்றார்.கூட்டத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் வரும் 16 ம் தேதி பாலக்கரையில் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடக்க உள்ள உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அளித்துள்ள பொதுநல சங்கங்களுக்கு நன்றி தெரிவிப்பது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக ஊழல் எதிர்ப்பு இயக்க செயலர் கலிவரதன், ஐந்தாவது தூண் ஒருங்கிணைப்பாளர் மாப்பிள்ளை மொய்தீன், நுகர்வோர் கூட்டமைப்பு செந்தமிழ்செல்வன், வியாபாரிகள் சங்கத் தலைவர் சத்தார்பாஷா, குடியிருப்போர் நலச் சங்க சிங்காரவேலு உள்ளிட்டோரை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொருளாளர் செல்வமணி நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us