/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 40 மூட்டை அரிசி பறிமுதல்வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 40 மூட்டை அரிசி பறிமுதல்
வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 40 மூட்டை அரிசி பறிமுதல்
வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 40 மூட்டை அரிசி பறிமுதல்
வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட 40 மூட்டை அரிசி பறிமுதல்
ADDED : அக் 01, 2011 11:05 PM
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அருகே, வாக்காளர்களுக்கு, 25 கிலோ அரிசி மூட்டை வழங்கிய, தி.மு.க., ஊராட்சி தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.வாலாஜாபாத் அருகே அமைந்துள்ளது அங்கம்பாக்கம் ஊராட்சி.
இதன் தலைவராக, தி.மு.க.,வைச் சேர்ந்த தினகரன் உள்ளார்.இவர், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது உத்தரவின் பேரில், அவரது ஆட்கள் நேற்று முன்தினம் இரவு, அங்கம்பாக்கம் ஊராட்சியில், வீடுகளுக்கு 25 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கும் பணியை துவக்கினர்.இது குறித்து பொதுமக்கள், மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.நள்ளிரவு 2 மணிக்கு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில், போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரைக் கண்டதும், அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். போலீசார், 25 கிலோ எடை கொண்ட, 40 மூட்டை அரிசியைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து,தினகரனை தேடி வருகின்றனர்.


