ஜன் லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது:தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் பேச்சு
ஜன் லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது:தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் பேச்சு
ஜன் லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாது:தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் பேச்சு
சென்னை: ''ஜன் லோக்பால் மசோதாவால் மட்டும், ஊழலை முற்றிலும் ஒழித்து விட முடியாது'' என, தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் பேசினார்.தேசிய தொழிலாளர் மையத்தின் சார்பில், 'ஜனநாயக ஊழல் மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில், சென்னை சாந்தோம், தியான ஆசிரமத்தில் கருத்தரங்கம் நடந்தது.
இதில்,தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் பேசியதாவது:ஊழலை ஒழிக்க, சமீப காலமாக பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஊழல் என்பது, நிதி நிலையில் நடக்கும் குளறுபடிகள் சம்பந்தப்பட்டது அல்ல. அதிகாரத்தைக் கொண்டு ஏமாற்றுவதும் ஊழல் தான். தற்போது, சமூக, அரசியல் போக்குகளில், ஊழல் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.சமூக சீர்திருத்தவாதி அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு, மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. ஜன் லோக்பால் என்கிற ஒரே ஒரு மசோதாவை தாக்கல் செய்வதால், ஊழலை முற்றிலும் ஒழித்து விட முடியாது.
கடந்த 2005 ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஊழல் பற்றிய தகவல் அறிந்தால், எங்கு சொல்ல வேண்டும் என்பது கூட, இன்றளவும் மக்களுக்குத் தெரியாது. ஊழலுக்கு, பொறுப்பற்ற நிலையில் சுயலாபம் பார்க்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் காரணம். 'ஊழல் வேண்டாம்' என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் தான் அதை ஒழிக்க முடியும்.இவ்வாறு, அருணா ராய் பேசினார்.கருத்தரங்கில், தேசிய பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ருத் மனோரமா, தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.