/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழைய பாடத்திட்ட புத்தகங்கள் இருப்பு வைக்க திட்டம்பழைய பாடத்திட்ட புத்தகங்கள் இருப்பு வைக்க திட்டம்
பழைய பாடத்திட்ட புத்தகங்கள் இருப்பு வைக்க திட்டம்
பழைய பாடத்திட்ட புத்தகங்கள் இருப்பு வைக்க திட்டம்
பழைய பாடத்திட்ட புத்தகங்கள் இருப்பு வைக்க திட்டம்
ADDED : ஜூலை 14, 2011 09:20 PM
பொள்ளாச்சி : தமிழகத்தில், சமச்சீர் கல்வி குறித்த அறிக்கை மீதான விசாரணை
நடத்து வரும் நிலையில் அச்சடிக்கப்பட்ட பழைய பாடத்திட்ட புத்தகங்களை மாவட்ட
தலைநகரங்களில் இருப்பு வைக்க திட்டமிடப் பட்டுள்ளது.தமிழகத்தில்,
கடந்தாண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட்ட சமச்சீர்
கல்வி திட்டத்தை நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்த
திட்டமிடப்பட்டது.
இந்த முறையை நடப்பாண்டில் அமல்படுத்த அ.தி.மு.க., அரசு
தடை விதித்து, பழைய பாடத்திட்டத்தை தொடர உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவை
எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நடப்பாண்டில், சமச்சீர் கல்வி
திட்டத்தை தொடர ஐகோர்ட் உத்தரவிட்டதால், அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்
மேல் முறையீடு செய்யப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தின் தன்மை குறித்து
நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அறிக்கை மீது
ஐகோர்ட்டில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு சார்பில்
நிபுணர் குழு அமைத்து சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு,
விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், பழைய பாடத்திட்டத்தின் கீழ்
புத்தகங்களை அச்சிட அரசு 'டெண்டர்' விட்டு, புத்தகம் அச்சிடும் பணி
நடக்கிறது. தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், இதுவரை அச்சிடப்பட்ட
பாடப்புத்தகங்களை மாவட்ட தலைநகரங்களிலுள்ள குடோன்களில் இருப்பு வைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த கல்வியாண்டு இறுதியில் சமச்சீர்
கல்வி திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட பாடப்புத்தங்கள் அனைத்து
பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பழைய
பாடத்திட்ட புத்தகங்களை கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டால், தீர்ப்பு
வெளியானதும், உதவி துவக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மூலம்
உடனடியாக பள்ளிகளுக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்க தாமதமானால்,
மாணவர்களின் நலன் கருதி இன்டர்நெட்டிலிருந்து பாடங்களை 'டவுன்லோடு' செய்து
பாடம் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.


