/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பயிர்களுக்கு உரிய நேரத்தில் உரம், விதை, பூச்சி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : செப் 17, 2011 02:13 AM
எட்டயபுரம், செப்.15- மானாவாரி பகுதியான எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகா விவசாயிகளுக்கு உரம், விதை, பூச்சி மருந்து, யூரியா ஆகியன உரிய காலத்தில் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மானாவாரி பகுதியான எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதி விவசாயிகள் பருவ மழையை எதிர்நோக்கி நிலங்களை உழுது, பண்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உரம், பூச்சிமருந்து, விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க கோரி வலியுறுத்தினர். இதன் பேரில் கூட்டுறவு இணை பதிவாளர் பருவமழை துவங்கும் முன்பு கூட்டுறவு கடன் வழங்குவதோடு உரம், விதை, பூச்சிமருந்து கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு உரம் போன்றவைகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் டிஏபி, யூரியா போன்ற உரங்கள் அதிகமான விலையில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே உரிய காலத்தில் உரம், விதை, பூச்சிமருந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழுவினர் மனு அனுப்பியுள்ளனர்.