/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் அதிமுக.,பொதுக்கூட்டம்தூத்துக்குடியில் அதிமுக.,பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக.,பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக.,பொதுக்கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக.,பொதுக்கூட்டம்
ADDED : ஆக 29, 2011 11:22 PM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எம்ஜிஆர்., இளைஞரணி செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். மாவட்ட அம்மா பேரவை இணைசெயலாளர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் தொகுதி கழக செயலாளர் மார்க்கண்டேயன், மாவட்ட எம்ஜிஆர்., இளைஞரணி தலைவர் சின்னப்பன், தூத்துக்குடி ஒன்றிய கழக செயலாளர் சண்முகவேல், அமிர்த கணேசன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பால்ராஜ், இணை செயலாளர் ரவி, துணை செயலாளர்கள் ஞானராஜ், காளிபாண்டியன், பொருளாளர் செல்வா, துணை தலைவர் ஜெபமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருநகரகழக செயலாளர் ஏசாதுரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாநில மீனவரணி இணை செயலாளர் ஜெனிபர் சந்திரன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, இளைஞர் பாசறை துணை செயலாளர் மனோகரன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட கழக இணை செயலாளர் மோகன், முன்னாள் எம்எல்ஏ.,க்கள் செல்லத்துரை, தாமோதரன், டேனியல்ராஜ் உட்பட அதிமுக.,வினர் பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணியினர் செய்திருந்தனர். நகர எம்ஜிஆர்., இளைஞரணி செயலாளர் இராபர்ட் ஹென்றி நன்றி கூறினார்.